×

கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் வந்தது

சென்னை: சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 2021ல் கொரோனா பரவலின்போது நீலா, பத்மநாபன் ஆகிய இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. மேலும், கவிதா, புவனா மற்றும் விஜி ஆகிய சிங்கங்களும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற சிங்கமும் உயிரிழந்தன. இதனால் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

பூங்கா அதிகாரிகள் சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். இந்நிலையில், கர்நாடகா உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடக உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் வந்தது appeared first on Dinakaran.

Tags : Vandalur Park ,Karnataka ,Chennai ,Arijar Anna Zoo ,Vandalur, Chennai ,Corona ,Neela ,Padmanabhan ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...